Arts, culture, entertainment and media
மாவட்டத்தில் அண்ணாதுரை பிறந்தநாள் விழா : தி.மு.க.,- அ.தி.மு.க., கொண்டாட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டத்தில் தி.மு.க., -அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் சார்பில் முன்னாள் முதல்வர் அண்ணாதுரை பிறந்த நாள் விழா நடந்தது.
மத்திய மாவட்ட செயலர் லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமையில், விழுப்புரம், கலைஞர் அறிவாலயத்தில் உள்ள அண்ணாதுரை சிலைக்கும், பின்னர் விழுப்புரம் எம்.எல்.ஏ., அலுவலகத்திலும், அண்ணாதுரை படத்திற்கு மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சிகளில், வானூர் எம்.எல்.ஏ., கவுதம், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் கண்ணப்பன், விழுப்புரம் நகர செயலர் வெற்றிவேல், கோட்டக்குப்பம் நகர செயலர் ஜெயமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் தெய்வசிகாமணி, முருகவேல், ராஜா, செல்வமணி, கணேசன், மைதிலி ராஜேந்திரன், ராஜி, சீனுசெல்வரங்கம், பாஸ்கரன், புஷ்பராஜ், தலைமை கழக வழக்கறிஞர் சுரேஷ், பொதுக்குழு உறுப்பினர்கள் வாசன், பஞ்சநாதன், சம்பத், கோலியனூர் ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், மாவட்ட இளைஞரணி தினகரன், நகர துணை செயலர் புருஷோத்தமன் மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய நிர்வாகிகள், கட்சியினர் பலர் கலந்துகொண்டு, அண்ணாதுரை சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
செஞ்சி செஞ்சியில் நடந்த நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் கார்த்திக் தலைமை தாங்கினார். அப்பம்பட்டில் நடந்த நிகழ்ச்சிக்கு ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார்.
மாவட்ட செயலாளர் மஸ்தான், அண்ணாதுரை படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தலைவர் மொக்தியார் அலி, அவை தலைவர்கள் வாசு, ஆறுமுகம் மாவட்ட பிரதி நிதி அய்யாதுரை, வல்லம் ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார், மேல்மலையனுார் ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன், மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், நகர நிர்வாகிகள் சங்கர், செயல்மணி, சுமித்ரா சங்கர், சர்தார், மாவட்ட பிரதிநிதி ரவி, தாஸ் கோட்டீஸ்வரன், பழனி, அய்யாதுரை உட்பட பலர் பங்கேற்றனர்.
அ.தி.மு.க., விழுப்புரம் பழைய நகராட்சி அலுவலகம் எதிரில் உள்ள அண்ணாதுரை சிலைக்கு, அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் பசுபதி தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. மாவட்ட பொருளாளர் முருகன், துணை செயலாளர் ஷாலினி, எம்.ஜி.ஆர்., மன்றம் தனுசு, நகர செயலாளர்கள் செங்குட்டுவன், ராமதாஸ், தனுசு, ஒன்றிய செயலாளர்கள் பாக்கியராஜ், குமார், சண்முகம், ரமேஷ், சீத்தாராமன்
மாநில ஜெ. பேரவை துணை செயலாளர்கள் திருப்பதி பாலாஜி, விஸ்வநாதன், மாவட்ட விவசாய அணி செயலாளர் ரவிச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.
திண்டிவனம் செஞ்சி ரோட்டிலுள்ள அண்ணாதுரை சிலைக்கு, நகர அ.தி.மு.க.,செயலாளர் மணிமாறன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதில் நகர அவைத்தலைவர் வேல்முருகன், முன்னாள் நகர செயலாளர் கணேசன், பொருளாளர் ராஜேந்திரன், முன்னாள் கவுன்சிலர்கள் சக்திவேல், திருவேங்கடம், செந்தில், நகர எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் மாணிக்கம், வழக்கறிஞர்கள் ஜெயச்சந்திரன், மூர்த்தி, நகர நிர்வாகிகள் வீராசாமி, ராமு, முத்துகிருஷ்ணன், ஆனந்தன், வினோத், அண்ணாதுரை உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
விக்கிரவாண்டி பஸ் நிலையத்தில் நடந்த விழாவிற்கு நகர செயலாளர் முருகன் தலைமை தாங்கி அண்ணாதுரை படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மாவட்ட விவசாய அணி துணைச் செயலாளர் பலராமன், கவுன்சிலர்கள் புஷ்பராஜ் , பவானி ராஜேஷ், வழக்கறிஞர் அணி முருகன், பிரகாஷ், நகர துணைச் செயலாளர் கண்ணன் , தேவராஜ்,பேரவை செயலாளர் ராஜி, ராதாகிருஷ்ணன்,தொழில் நுட்ப அணி செயலாளர் சதீஷ், இளைஞர் அணி வாசு, சரத் ,வல்லரசு உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.