Politics
கோவில் சிலைகளை பாதுகாப்பதில் அரசு அலட்சியம்: பா.ஜ.,

சென்னை: தமிழக பா.ஜ., ஆன்மிகம் மற்றும் ஆலய மேம்பாட்டு பிரிவு செயலர் வினோத் ராகவேந்திரன் வெளியிட்ட அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டம், நடுபழனி மரகத தண்டாயுதபாணி கோவிலில், பல கோடி ரூபாய் மதிப்புள்ள, 2.5 அடி உயர மரகத முருகன் சிலை திருடப்பட்டுள்ளது. கோவில்களில் இருந்து சிலைகள் திருடப்பட்டு, வெளிநாடுகளுக்கு கடத்தப்படும் அவலம் நடக்கிறது.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசின் முயற்சியால், 2023ல் ஆஸ்திரேலியாவில் இருந்து, அரியலுார் ஆஞ்சநேயர் சிலை; 2026ல் பிரிட்டனில் இருந்து தாடிக்கொம்பு திருமங்கை ஆழ்வார் சிலை; அமெரிக்காவில் இருந்து சோமாஸ்கந்தர், நடராஜர் சிலைகள் என மீட்கப்பட்டன.
கடத்தப்பட்ட சிலைகளை மத்திய அரசு மீட்டாலும், சிலைகளை பாதுகாப்பதில், தமிழக அரசின் செயல்பாடு அலட்சியமாகவே உள்ளது. ஒவ்வொரு சிலைக்கும் உலோகத்தன்மை, எடை, அளவு, புகைப்படங்களுடன் கூடிய 'டிஜிட்டல்' ஆவணப்பதிவு ஆகியவை அவசியம்.
மீட்கப்பட்ட 2,000-க்கும் மேற்பட்ட சிலைகள், சென்னை எழும்பூர் அருங்காட்சியகத்தில் அடைக்கப்பட்டுள்ளதா க தெரிகிறது. வெறும் கலைப்பொருட்களாக அவற்றை பார்க்காமல், சம்பந்தப்பட்ட கோவில்களில் ஒப்படைக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.