Sport
மாநில கிரிக்கெட் போட்டி திருவள்ளூர் அணி அபாரம்
சென்னை, செப்.5– திருப்பூரில் நடந்த மாநில கிரிக்கெட் போட்டியில் திருவள்ளூர் அணி, கிருஷ்ணகிரி அணியை, 175 ரன்கள்
திருப்பூரில் நடந்த மாநில கிரிக்கெட் போட்டியில் திருவள்ளூர் அணி, கிருஷ்ணகிரி அணியை, 175 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் ஆடவருக்கான மாநில கிரிக்கெட் போட்டி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடந்து வருகிறது.
இதில் சென்னை தவிர மற்ற அனைத்து மாவட்ட அணிகளும் பங்கேற்று விளையாடி வருகின்றன. திருப்பூர் டீ பப்ளிக் பள்ளி கிரிக்கெட் மைதானத்தில் நடந்த போட்டியில் திருவள்ளூர் அணி, கிருஷ்ணகிரி அணியை எதிர்த்து மோதியது.
‘டாஸ்’ வென்ற திருவள்ளூர் அணி பேட்டிங்கை தேர்வு செய்து, 50 ஓவரில், 9 விக்கெட் இழப்புக்கு, 256 ரன்கள் குவித்து ஆட்டத்தை நிறைவு செய்தது.
பின், 257 ரன்கள் என்ற இலக்கை துரத்தி களம் இறங்கிய கிருஷ்ணகிரி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக அமைந்தது. திருவள்ளூர் அணியின் துல்லியமான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், கிருஷ்ணகிரி அணி, 24 ஓவர்கள் மட்டுமே பேட்டிங் செய்து, 81 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆட்டத்தை கை விட்டது. இதையடுத்து திருவள்ளூர் அணி, கிருஷ்ணகிரி அணியை, 175 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.