Lifestyle and human interest
மாற்றுத் திறனாளிகளுக்கான குறைகேட்புக் கூட்டம்
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., அலுவலகத்தில் கோட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான குறைகேட்புக் கூட்டம் நேற்று நடந்தது.
கள்ளக்குறிச்சியில் நடந்த கூட்டத்திற்கு ஆர்.டி.ஓ., முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் அந்தோணிராஜ் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், கல்வராயன்மலை, சின்னசேலம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை, பராமரிப்பு உதவித்தொகை, பெட்ரோல் ஸ்கூட்டர், தையல் இயந்திரம், தொழில் தொடங்க வங்கி கடனுதவி உட்பட பல்வேறு கோரிக்கை மற்றும் புகார்கள் தொடர்பான மனுக்களை வழங்கி பேசினர்.
கூட்டத்தில், 374 மனுக்கள் பெறப்பட்டது. பெறப்பட்ட மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆர்.டி.ஓ., நேர்முக உதவியாளர் ராஜலட்சுமி, சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார்கள் சிவசங்கரன், வாசுதேவன், தேவதாஸ் உட்பட பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.