கர்ப்பிணியை கொன்றவர் கைது

இடைப்பாடி: சேலம் மாவட்டம், கோணசமுத்திரத்தைச் சேர்ந்தவர் கோகிலா, 23. இவர், திருமணம் ஆகாத நிலையில் கர்ப்பமானார். கன்னியாம்பட்டி கூலித்தொழிலாளி அம்மாசி, 26, காரணம் என, சங்ககிரி போலீஸ் ஸ்டேஷனில் கோகிலா புகாரளித்தார்.
போலீசாரிடம், கோகிலாவை திருமணம் செய்து கொள்வதாக கூறிய அம்மாசி, அழைத்து சென்றார்.
நேற்று முன்தினம், அப்பகுதி விவசாய கிணற்றில், கோகிலா சடலமாக மீட்கப்பட்டார்.
விசாரணையில், கோகிலாவின் கழுத்தை, துப்பட்டாவால் நெரித்து, அம்மாசி கொலை செய்தது தெரிந்தது. அம்மாசியை போலீசார் நேற்று கைது செய்தனர்.