திருமணம் ஆகாத ஏழு மாத கர்ப்பிணி கிணற்றில் மூட்டையில் சடலமாக மீட்பு
இடைப்பாடி; கிணற்றில் மிதந்த மூட்டையில் பெண் சடலம் இருந்ததால், போலீசார் விசாரித்தனர். அதில் திருமணம் ஆகாமல், 7 மாத கர்ப்பிணியாக இருந்-தது தெரிந்தது. அவரை கர்ப்பமாக்கிய வாலிப-ரிடம், போலீசார் விசாரிக்கின்றனர்.
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே கோணசமுத்திரம், கருங்குள்ளன் பகுதியை சேர்ந்த, பேராக்கவுண்டர் மகள் கோகிலா, 23. இவ-ருக்கு திருமணம் ஆகாத நிலையில், கடந்த மாதம், 20ல் வயிறு வலி ஏற்பட்டுள்ளது.பெற்றோர், சமுத்திரம் ஆரம்ப சுகாதார நிலை-யத்துக்கு அழைத்துச்சென்றனர். அப்போது கோகிலா, 7 மாத கர்ப்பமாக இருப்பதாக, மருத்து-வர்கள் தெரிவித்தனர். பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து சங்ககிரி மகளிர் போலீஸ் ஸ்டேஷனில், கோகிலா புகார் கொடுத்தார். அதில், 'என் கர்ப்பத்துக்கு காரணம், கன்னியாம்-பட்டியை சேர்ந்த மாரி மகன் அம்மாசி, 26' என கூறியிருந்தார். இதனால் அம்மாசியை வரவ-ழைத்து, போலீசார் விசாரித்தனர். அப்போது, 'ஆக., 31ல் திருமணம் செய்து கொள்கிறோம்' என அம்மாசி கூறினார். இதனால் போலீசார், அம்மா-சியுடன் கோகிலாவை அனுப்பி வைத்தனர்.
ஆனால் கடந்த மாதம், 26ல் கோகிலா காணாமல் போனதாக, அம்மாசி, பேராக்கவுண்டரிடம் தெரி-வித்தார். தொடர்ந்து பேராக்கவுண்டர், 'கோகி-லாவை காணவில்லை' என கொங்கணாபுரம் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தார். போலீசாரும் வழக்குப்பதிந்து, கோகிலாவை தேடினர்.
இந்நிலையில் வெள்ளாளபுரம், தானக்குட்டிவ-ளவை சேர்ந்த கோவிந்தம்மாள் விவசாய கிணற்றில் நேற்று துர்நாற்றம் வீசியது. மக்கள் பார்த்தபோது, வெள்ளை நிற சாக்குப்பையில், ஒரு மூட்டை மிதந்தது. மக்கள் தகவல்படி, கொங்கணாபுரம் போலீசார் வந்து, இடைப்பாடி தீயணைப்பு வீரர்கள் உதவியோடு, மூட்டையை வெளியே எடுத்து பார்த்தபோது, பெண் சடலம் இருந்தது.
மேலும் விசாரணையில், அது கர்ப்பிணியாக இருந்த கோகிலா என தெரியவந்தது. இதனால் அம்மாசியிடம், போலீசார் விசாரிக்கின்றனர். மேலும் சேலம் எஸ்.பி., குத்தாலிங்கம், சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டார்.