மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி
ஸ்ரீபெரும்புதுார், செப். 10– ஸ்ரீபெரும்புதுார் அருகே ஆரநேரியில், மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்த, 28 வயது
ஸ்ரீபெரும்புதுார் அருகே ஆரநேரியில், மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்த, 28 வயது வடமாநில வாலிபர் உயிரிழந்தார்.
அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுரோஜ் அலி, 28. ஸ்ரீபெரும்புதுார் அடுத்த ஆரநேரியில் தங்கி, அதே பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் இரவு 11:30 மணிக்கு, இரண்டாவது தளத்தின் மொட்டை மாடியில் நின்று கொண்டு மொபைல் போன் பேசினார்.
அப்போது, எதிர்பாராத விதமாக மொட்டை மாடியில் இருந்து தவறி விழுந்தார். இதில், தலையில் பலத்த காயமடைந்த சுரோஜ் அலியை அக்கம், பக்கத்தின் மீட்டு, ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு, மருத்துவர்கள் பரிசோதித்து அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஸ்ரீபெரும்புதுார் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.