Sport
‘கொடை’ டிவிஷன் ‘லீக்’ கிரிக்கெட் போட்டிகள்
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், டேக் டி.டி.சி.ஏ., கொடைக்கானல் டிவிஷன் ‘லீக்’ கிரிக்கெட் போட்டிகள் கொடைக்கானல் பவான்ஸ் பள்ளி மைதானத்தில் நடந்தது.
கொடைக்கானல் ராயல் கிரிக்கெட் கிளப் அணி 20 ஓவர்களில் 127/6 ரன்கள் (அனுஸ்ரீ 3 விக்கெட்டுகள்) எடுத்தது. எதிர்த்து விளையாடிய ராக் ஸ்டார் லெவன் கிரிக்கெட் கிளப் அணி 19.3 ஓவர்களில் 101 ரன்கள் (பிரதீப் 3 விக்கெட்டுகள்) எடுத்து, ‘ஆல் அவுட்’ ஆகி தோல்வி அடைந்தது.
எங்ஸ்டர்ஸ் கிரிக்கெட் கிளப் ஜூனியர் அணி 16 ஓவர்களில் 177/3 ரன்கள் (அருண்குமார் 104 நாட் அவுட், தினேஷ்காமாட்சி 40) எடுத்தது. எதிர்த்து விளையாடிய வில்பட்டி கோல்டன் ஸ்டார் கிரிக்கெட் கிளப் அணி 16 ஓவர்களில் 102/4 ரன்கள் (அப்துல்லத்தீப் 48) எடுத்து தோல்வி அடைந்தது.
கொடைக்கானல் லயன் கிரிக்கெட் கிளப் அணி 16.4 ஓவர்களில் 72 ரன்கள் (செல்வக்குமார் 4 விக்கெட்டுகள்) எடுத்து, ‘ஆல் அவுட்’ ஆனது. எதிர்த்து விளையாடிய கிரவுண்ட் ப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் அணி 9.1 ஓவர்களில் 75/2 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
லேக் ப்ரண்ட்ஸ் கிரிக்கெட் கிளப் அணி 25 ஓவர்களில் 225/2 ரன்கள் (சண்முகம் ஜோன்ஸ் 68, இன்பராஜ் 61, நாட் அவுட்) எடுத்தது. எதிர்த்து விளையாடிய பெஸ்ட் லெவன் கிரிக்கெட் கிளப் அணி 21.2 ஓவர்களில் 70 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகி தோல்வி அடைந்தது.
யூத் லெவன் கிரிக்கெட் கிளப் அணி 18.5 ஓவர்களில் 102 ரன்கள் (மனோஜ்குமார் 4 விக்கெட்டுகள்) எடுத்து ‘ஆல் அவுட்’ ஆனது. எதிர்த்து விளையாடிய ரைநோஸ் கிரிக்கெட் கிளப் அணி 13.3 ஓவர்களில் 103/2 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
பிளாக் மாம்பாஸ் கிரிக்கெட் கிளப் அணி 15.5 ஓவர்களில் 94 ரன்கள் எடுத்து ‘ஆல் அவுட்’ ஆனது. எதிர்த்து விளையாடிய கே.எம்., கிரிக்கெட் கிளப் அணி 12.2 ஓவர்களில் 95/3 ரன்கள் (மணிகண்டன் 43, நாட் அவுட்) எடுத்து வெற்றி பெற்றது.