வேலை கிடைக்காமல் தவித்தவருக்கு வழித்துணை பாபா காட்டிய வழி! சாயி மகானின் அற்புதங்கள்! - சாய்ராம்ஜி

"என்னோட பேர் கார்த்திக். நான் திருவண்ணாமலை பக்கம். படிச்சு முடிச்சு பத்து வருஷமா வேலை தேடி அலைஞ்சுட்டே இருந்தேன். எங்க போனாலும் "பிறகு கூப்பிடு றோம்'ன்னு சொல்லிடுவாங்க. ஆனா அந்த "பிறகு' மட்டும் வரவே வரல. வீட்டுல அம்மா, அப்பா என்னை நம்பித்தான் இருந்தாங்க. நானோ தினமும் மனசுக்குள்ள உடைஞ்சுட்டே இருந்தேன். ஒரு கட்டத்துல, "என்னால இனிமே எதுவுமே முடியாது போல'ன்னுகூட தோண ஆரம்பிச்சிடுச்சு.
அப்பதான் எங்க அத்தை, "ஒரு தடவை வண்டலூர் வழித்துணை பாபா கூட்டு பிரார்த்தனைக்கு வா. பாபாகிட்ட மனசார சொல்லு'ன்னு சொன்னாங்க. நானும் சரி, "ஒரு தடவை போய்ப் பார்த்துடலாம்'னு வந்தேன்.
அங்க போய் வழித்துணை பாபாவை பார்த்தவுடனே, ஏனோ மனசுக்குள்ள இருந்த பாரம் உடைஞ்ச மாதிரி ஆயிடுச்சு. கூட்டு பிரார்த்தனையில உட்கார்ந்திருந்தப்போ, நான் மட்டும் இல்ல, என்ன மாதிரி எவ்வளவோ பேர் கஷ்டத்தோட வந்திருக்காங்கன்னு புரிஞ்சது.
பிரார்த்தனை முடிஞ்சதும் சாய்ராம்ஜி அப்பாவை பார்த்து, "அப்பா... எனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கணும். வீட்டுல எல்லாரும் என்னை நம்பியிருக்காங்க. நான் ரொம்ப மனசு உடைஞ்சு போயிட்டேன்'ன்னு சொன்னேன்.
அப்பா ரொம்ப அமைதியா சிரிச்சுட்டு, "வேலை கிடைக்கலன்னா வாழ்க்கை முடிஞ்சிடல. நீ இதுவரைக்கும் மூடிய கதவையைத்தான் பார்த்திருக்க. இனிமே திறந்திருக்கும் கதவையும் பாரு. தினமும் காலையில வழித்துணை பாபா முன்னாடி ஒரு தீபம் ஏத்து, மனசார வேண்டிக்கோ. வியாழக்கிழமை உன்னால முடிஞ்ச அளவுக்கு ஒருத்தருக்கு சாப்பாடு வாங்கிக்கொடு. பெரிய வேலை, சின்ன வேலைன்னு பிரிக்காம கிடைக்கிற வாய்ப்பை மதிச்சு போ'ன்னு சொன்னார்.
நானும் அப்படியே செய்ய ஆரம்பிச்சேன். தினமும் பிரார்த்தனை பண்ணேன். வேலைக்கு விண்ணப்பம் அனுப்பிட்டே இருந்தேன். மூணாவது வாரத்துல திடீர்னு ஒரு கம்பெனிலிருந்து கால் வந்துச்சு. பெரிய பதவி இல்ல. சின்ன வேலைதான். ஆனா அப்பா சொன்ன வார்த்தை ஞாபகம் வந்துச்சு. உடனே சேர்ந்துட்டேன்.
ஆறு மாதம் ஆகுறதுக்குள்ள, என் உழைப்பைப் பார்த்து அதே கம்பெனி என்னை நிரந்தரமாக வேலைக்கு எடுத்தாங்க. சம்பளமும் கூட்டினாங்க. முதல் சம்பளம் வாங்கின உடனே, நான் அம்மாவை கூட்டிக்கிட்டு நேரா வண்டலூர் வழித்துணை பாபா கூட்டு பிரார்த்தனைக்குத்தான் வந்தேன்.
அப்போதான் எனக்கு ஒரு விஷயம் புரிஞ்சது. நான் கேட்டது வேலைதான். ஆனா பாபா கொடுத்தது அதைவிட பெரியது. நம்பிக்கையைத் திருப்பிக் கொடுத்தார். வாழணும் என்ற தைரியத்தை கொடுத்தார். இப்போ ஒவ்வொரு வியாழக்கிழமையும் என்னால முடிஞ்ச அளவுக்கு அன்னதானத்துக்கும் உதவி பண்றேன். இன்னும் வேலை இல்லாம கஷ்டப்படுற இளைஞர்களுக்காக வேண்டிக்கிறேன்.
இன்னைக்கும் யாராவது "உன் வாழ்க்கையை மாற்றுனது என்ன?'ன்னு கேட்டா, நான் ஒரே ஒரு விஷயம்தான் சொல்வேன்...
"நான் மனசு உடைஞ்சு போய் வந்த இடம்' வண்டலூர் வழித்துணை பாபா கூட்டு பிரார்த்தனை. நான் நம்பிக்கையோட திரும்பிப் போன இடமும் அதுதான்!...
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)