Religion
தி.நகர் திருமலை திருப்பதி பெருமாள் கோவிலில் பவித்ர உத்சவம் விமரிசை
சென்னை: தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில், நான்கு நாள் பவித்ர உத்சவ விழா, வெகு விமரிசையாக நடந்தது.
தி.நகர், வெங்கட்ரமணா சாலையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான பெருமாள் கோவிலில், நான்கு நாள் பவித்ர உத்சவ விழா, கடந்த 6ம் தேதி அங்குரார்ப்பணத்துடன் தொடங்கியது.
இறைவனின் சக்தி வாயிலாக விளையும் பலன்களை, பக்தர்களுக்கு அதிகரித்து கொடுக்க வேண்டும் என்பதற்காக சடங்கு, சம்பிரதாயங்கள் அடிப்படையில், இந்த பவித்ர உத்சவம் நடத்தப்படுகிறது.
நேற்று முன்தினம் முதல் யாகசாலை வளர்க்கப்பட்டு ஹோமம், பவித்ர பிரதிஷ்டை, ஸ்நபன திருமஞ்சனம் நடந்தது. பவித்ர உத்சவத்தின் பிரதான நாளான நேற்று காலை ஹோமம், பூர்ணாஹுதி உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. அதைத்தொடர்ந்து, சிறப்பு அபிஷேகமும், ஆரத்தியும் காண்பிக்கப்பட்டது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.