633 ஆண்டுக்கு முன் ஏரி தானம் வழங்கிய கல்வெட்டு கண்டெ-டுப்பு

கிருஷ்ணகிரி:பர்கூர் அருகே, ஏரியை தானமாக வழங்கிய, 633 ஆண்டுகளுக்கு முற்பட்ட, விஜய நகரர் கால அரிய வகை கல்வெட்டு கண்டுபி-டிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி வரலாற்று ஆய்வு மற்றும் ஆவணப்படுத்தும் சங்கம், தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவனம் ஆகி-யவை இணைந்து, கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த குட்-லட்டி என்ற கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டபோது, வரதப்பன் என்பவரது நிலத்திலிருந்த கல்வெட்டை படித்து ஆய்வு செய்-தனர். இது குறித்து, தமிழ்நாடு தொன்மை இயல் ஆய்வு நிறுவன செயலர் கோவிந்தராஜ் கூறியதாவது:
விஜயநகர பேரரசை, தந்தை இரண்டாம் தேவராயன் ஆண்ட-போது, அவரது மகன் இம்மடி
புக்கராயன் இப்பகுதியை உள்ளடக்கிய முள்வாய் ராஜ்யத்தை ஆளுனராய் இருந்து, ஆண்டு வந்துள்ளார். இவரது கல்வெட்-டுகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இதுவரை, 5 கண்டறியப் பட்-டுள்ளது. குட்லட்டியிலுள்ள இக்கல்வெட்டு ஸ்ரீமுக ஆண்டில் வெட்டப்பட்டது. இது பொது ஆண்டு (கி.பி) 1393க்கு இணை-யானதாகும்.
அப்போது, மகாராஜகடை, குருவிநாயனப்பள்ளி, காரகுப்பம், மேகலசின்னம்பள்ளி, வரட்டனஹள்ளி ஆகிய பகுதிகளை உள்ள-டக்கியது அங்கணப்பற்று என்னும் பகுதியாகும். இப்பகுதியை நாயக்கம் செய்து வந்த மாமிண்டர் கேசையப்பாவை, ஈராண்டை என்பவரது மகன் வையணந்தார் என்பவர், ஏரி ஒன்றை ஏற்ப-டுத்தி, அதை பாதுகாக்க, செல்லப்பிள்ளையார் கோவிலை கட்டி அக்கோவிலுக்கு, 5 குளகம் விதை விளைகின்ற அளவு கொல்-லையையும், 6 குளகம் விதை விளைகின்ற அளவு கழனியும், எண்ணை ஆட்டும் செக்கையும் தானமாக வழங்கிய செய்தியை இக்கல்வெட்டு கூறுகிறது. 'சாற்றை' ஏரி என்ற சொல் இக்கல்-வெட்டில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
சாற்றை ஏரி என்பது, ஏரியின் ஒரு பகுதியில், சேறு மற்றும் மூங்-கிலை பயன்படுத்தி ஒரு தடுப்பணை போன்று அமைத்து அதை மீன் பிடிக்க பயன்படுத்துவதாகும். தற்போதும் ஏரிகளில் இவ்வ-மைப்பு காணப்படுகிறது. இச்சொல் தமிழகத்திலேயே இக்கல்-வெட்டில்தான் முதன் முறையாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இவ்-வாறு அவர் கூறினார்.
ஆவணப்படுத்தும் சங்க செயலர் தமிழ்செல்வன், துணைச்செ-யலர் பாலாஜி, சரவணகுமார் உள்பட பலர் உடனிருந்தனர்.