Arts, culture, entertainment and media
முதல் நாளே இரு அணிகளாகப் பிரிந்த பிக் பாஸ் போட்டியாளர்கள்!

பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் இரு அணிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது குறித்து...
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் இரு அணிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளனர்.
அரசியல் சட்டப்பேரவையை மையப்படுத்தியதைப்போன்று ஜனநாயக அறை புதிதாகத் திறக்கப்பட்டுள்ளது. இதனால், ஆளும் அணியினர், எதிர் அணியினர் என போட்டியாளர்கள் இரு அணிகளாக பிரிக்கப்பட்டுள்ளனர்.
ஆளும் அணியின் தலைவராக நடிகை ஷாதிகாவும், எதிர் அணியின் தலைவியாக வினோத் பாபுவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ஆளும் அணியின் குறைகளை எதிர் அணியினர் ஜனநாயக அறையில் சுட்டிக்காட்டலாம்.
பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி செப். 6 ஆம் தேதி தொடங்கியது. விஜய் சேதுபதி இம்முறையும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். பிரபலங்கள் மட்டுமே போட்டியாளர்களாக பங்கேற்றுவந்த நிலையில், இந்த சீசனில் பொதுமக்கள் தரப்பில் 3 பேர் (ஷாமா, ஜேசன், முனியம்மா) போட்டியாளர்களாக விளையாடி வருகின்றனர். மொத்தம் 19 போட்டியாளர்கள் பிக் பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.
இவர்களுக்கிடையே இந்த வார தலைவரை தேர்வு செய்ய வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. போட்டியாளர்கள் அனைவரும் தலைவர் பதவிக்கு போட்டியிட்டவர்களுக்கு வாக்களித்தனர்.
இதில் அதிக வாக்குகளைப் பெற்று வினோத் பாபு முதலிடத்தில் இருந்தார். ஷாதிகா இரண்டாவது இடம் பெற்றார். மூன்றாவது இடத்தை ஷாமா - ஜேசன் ஆகியோர் இடம்பெற்றனர். மூன்றாவது இடத்திற்காக நடந்த பேச்சுவார்த்தையில் தலைவர் பதவிக்கான போட்டியில் இருந்து ஜேசன் விலகினார்.
இதனைத் தொடர்ந்து வினோத் பாபு, ஷாகிதா, ஷாமா இடையே நடந்த போட்டியில் ஷாகிதா வெற்றி பெற்று இந்த வார தலைவராகத் தேர்வானார்.
எஞ்சிய போட்டியாளர்கள் எதிர் அணியினராக இனி செயல்பட வேண்டும். அவர்களுக்கு வினோத் பாபு தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். எதிர் அணியில் ஜேசன், ஷாமா, சாந்தினி ஆகியோர் உள்ளனர்.
ஜனநாயக அறையில் ஆளும் அணியினர், எதிர் அணியினர்...
வீட்டின் நிர்வாகப் பொறுப்புகளை துறை வாரியாகப் பிரித்துக்கொண்டு ஆளும் அணியினர் மேற்கொள்வார்கள். அவற்றில் உள்ள குறைகளை எதிர் அணியினர் ஜனநாயக அறையில் சுட்டிக்காட்டலாம். ஆக்கப்பூர்வமான விவாதங்கள் மூலம் பிரச்னைகள் சரி செய்யப்படும்.
இம்முறை அரசியல் சட்டப்பேரவையை மையப்படுத்தி ஆளும் அணி, எதிர் அணி என இரு அணிகள் பிரிக்கப்பட்டுள்ளதால் நிகழ்ச்சியின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Bigg boss 10 tamil update Bigg Boss contestants split into two teams on the very first day
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.