Arts, culture, entertainment and media
Bigg Boss 10 Tamil | நாமினேஷன் செய்த ஹவுஸ்மேட்ஸ்.. சவால் விட்ட முனியம்மாள்.. வெளியேறப்போவது யார்?

Bigg Boss 10 | வார இறுதி வரவுள்ள நிலையில் யார் எவிக்ட் ஆகவுள்ளார் என்று ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
பிக்பாஸ் சீசன் 10 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த வாரம் வெளியேறப்போவது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பிக்பாஸ் சீசன் 10 கடந்த செப்டம்பர் 6ஆம் தேதி மாலை தொடங்கியது. தொடர்ந்து லீடர், ஹவுஸ்மேட்ஸ் என அனைத்து போட்டியாளர்களும் விறுவிறுப்பாக விளையாடி வருகின்றனர். எந்த சீசனிலும் இல்லாத ஒன்றாக மாமன்றம் போன்ற அமைப்பில் பிக்பாஸ் நடைபெறுகிறது. சமூகத்தில் அனைவரும் அரசியல் பேசி வரும் சூழலில், பிக்பாஸிலும் இந்த அமைப்பு உருவாகியுள்ளது. ஆளும் அணி மற்றும் எதிர் அணி என இரு அணிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ஆளும் அணியின் தலைவராக ஷாதிகாவும், எதிர் அணியின் தலைவியாக வினோத் பாபுவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இப்படி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 10 வீட்டில் இந்த வாரத்திற்கான எவிக்ஷன் நாமினேஷன் பரபரப்பு அதிகரித்துள்ளது. கேப்டன் வினோத் பாபு, முனியம்மாள், தன்யா பல்லத் மற்றும் சவின்யா ஆகிய மூவரையும் எவிக்ஷனுக்காக நாமினேட் செய்கிறார். இதனைத் தொடர்ந்து, முனியம்மாள் தனது நாமினேஷன் குறித்து தைரியமாக பதிலளிக்கிறார். தன்னை நாமினேட் செய்வதன் மூலம், வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் தன்னைக் கண்டு பயப்படுகிறார்கள் என்றால், அந்தப் பெருமையுடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறத் தயாராக இருப்பதாக அவர் கூறுகிறார்.
மேலும், இது வினோத் பாபுவுக்கு மட்டும் விடுக்கும் சவால் அல்லாமல், பிக் பாஸ் வீட்டில் உள்ள அனைத்து போட்டியாளர்களுக்கும் ஒரு திறந்த சவாலை முன்வைக்கிறார் முனியம்மாள். தன்னைக் கண்டு பயப்படவில்லை என்றால், தன்னுடன் போட்டியிட்டு தங்களது திறமையை நிரூபிக்குமாறு அவர் சவால் விடுக்கிறார். முனியம்மாளின் இந்த அதிரடியான பேச்சு, நாமினேஷன் பரபரப்பை மேலும் அதிகரித்துள்ள நிலையில், அவரது தன்னம்பிக்கை அவருக்கு சாதகமாக அமையுமா? அல்லது இந்த நாமினேஷன் அவரது பிக் பாஸ் பயணத்திற்கு முற்றுப்புள்ளி வைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
பிக் பாஸ் தமிழ் சீசன் 10-ஐ இரவு 9:30 மணிக்கு விஜய் டிவியில் காணலாம். JioHotstar-ல் எப்போது வேண்டுமானாலும் ஸ்ட்ரீம் செய்யலாம். மேலும், பிக் பாஸ் வீட்டின் 24x7 நேரலை ஒளிபரப்பையும் JioHotstar-ல் காணலாம்.
