Religion
வில்வநாத ஈஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம்
காஞ்சிபுரம், செப். 18– காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையம், நான்கு தெருவார் தோப்பு, காமாட்சி அம்மன் உடனுறை
காஞ்சிபுரம், பிள்ளையார்பாளையம், நான்கு தெருவார் தோப்பு, காமாட்சி அம்மன் உடனுறை வில்வநாத ஈஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.
இதை முன்னிட்டு, கடந்த 14ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின.
அதை தொடர்ந்து நேற்று காலை, கோவில் கோபுர விமான கும்பாபிஷேகம் மற்றும் மூலவர் கும்பாபிஷேகம் நடைபெற்றன.
யாகசாலை பூஜைகள் ரமேஷ் சிவாச்சாரியார் தலைமையில் நடைபெற்றது. மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், பர்வதமலை மௌனகுருவின் சீடர் சவுந்தரானந்த சுவாமிகள் ஆகியோர் முன்னிலையில் பகல் 12:30 மணிக்கு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கும்பாபிஷேகத்திற்கு பின், மூலவருக்கும், பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகத்தினை கோவில் அர்ச்சகர் சங்கர் செய்தார்.

