Politics
மாஜி மந்திரி எ.வ.வேலு மீது அமைச்சர் ஆதவ் புகார்
ச ட்டசபையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது: முந்தைய தி.மு.க., ஆட்சியில், பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறை
ச ட்டசபையில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பேசியதாவது:
முந்தைய தி.மு.க., ஆட்சியில், பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக எ.வ.வேலு இருந்தபோது, கடந்த ஜனவரி 14ம் தேதியிட்ட அரசாணை வாயிலாக, விரிவான சாலை உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 80 பணிகளுக்கு, 2,000 கோடி ரூபாய்க்கு முன்கூட்டியே அனுமதி பெறப்பட்டுள்ளது.
இது, 2026 - 27 பட்ஜெட்டில் சரி செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. இதற்கு சட்டசபையின் அனுமதி பெறப்படவில்லை. சட்டசபையின் நிதி மேலாதிக்கத்தையும், கண்ணியத்தையும் பாதித்த இந்த விவகாரத்தை உரிமைக் குழுவுக்கு அனுப்ப வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கு பதிலளித்த சபாநாயகர் பிரபாகர், ''இது குறித்து பரிசீலித்து, உரிய முடிவெடுக்கப்படும்,'' என்றார்.