Politics
எ.வ.வேலு மீது ரூ2000 கோடி ஊழல் புகார் சட்டப்பேரவையில் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தகவல்
திமுக ஆட்சிகாலத்தில் நெடுஞ்சாலை துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்காமல், எதிர்கால பட்ஜெட்டில் இருந்து இரண்டாயிரம் கோடி ரூபாய் முன்கூட்டியே ஒதுக்கப்பட்டுள்ளதில் ஊழல் நடந்துள்ளதாக குற்றம்சாட்டினார் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா.

2026-27ஆம் ஆண்டுக்கான எதிர்கால பட்ஜெட்டில் இருந்து ரூ.2,000 கோடி எடுக்கப்பட்டு, பட்ஜெட் அனுமதியின்றி ஒதுக்கப்பட்டுள்ளது என ஆதவ் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
ஆட்சிக்கு வந்துவிடுவோம் என நினைத்து, 80 பணிகளுக்கு முன்கூட்டியே பணி ஆணைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ரூ.2,000 கோடி ஒதுக்கியது குறித்து மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த விவகாரத்தை அவை உரிமை மீறல் பிரச்சனையாக எடுத்துக்கொண்டு, அவை உரிமை மீறல் குழுவிற்கு அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆதவ் வலியுறுத்தியுள்ளார்.
இது நிதி மேலாதிக்கத்தையும், சட்டப்பேரவையின் கண்ணியத்தையும் பாதிக்கும் செயல் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.