Arts, culture, entertainment and media
சிறுமிக்கு பாலியல் தொல்லை முஸ்லிம் மதகுருவுக்கு கம்பி

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம், சாக்கோ ட்டை அருகே, 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முஸ்லிம் மதகுரு அன்சாரி, 27, என்பவரை, போக்சோ வழக்கில் போலீசார் கைது செய்தனர்.
சாக்கோட்டை அருகே உள்ள கிரா மத்தைச் சேர்ந்த பெண், விவாகரத்து பெற்று தனியாக வசிக்கிறார். இவரது, 6 வயது மகள், இரண்டாம் வகுப்பு படிக்கிறார். சிறுமி இரண்டு ஆண்டுகளாக, ஊரில் உள்ள மசூதியில், குர்ஆன் ஓதும் வகுப்பிற்கு சென்று வந்தார்.
சில நாட்களாக சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. சிறுமியிடம், அவரது தாய் விசாரித்தபோது, குர்ஆன் வகுப்பு எடுக்கும் மதகுருவான, ராமநாதபுரம் மாவட்டம், தொண்டியை சேர்ந்த அன்சாரி, சிறுமிக்கு பலமுறை பாலியல் தொல்லை கொடுத்தது தெரிந்தது. சாக்கோட்டை போலீசார் போக்சோ வழக்கு பதிந்து, அன்சாரியை நேற்று கைது செய்தனர்.