Arts, culture, entertainment and media
சிறுமிக்கு பாலியல் தொல்லை; முஸ்லிம் மதகுரு போக்சோ வழக்கில் கைது

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் சாக்கோட்டை அருகே 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளிவாசல் மதகுருவை (அஜரத்) போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
சாக்கோட்டை அருகேயுள்ள ஊரை சேர்ந்த பெண் விவாகரத்து பெற்று தனியாக வசிக்கிறார். இவரது மகள் 2 ம் வகுப்பு படிக்கிறார். சிறுமி கடந்த 2 ஆண்டுகளாக ஊரில் உள்ள பள்ளிவாசலில் குர்ஆன் ஓதும் வகுப்பிற்கு சென்று வந்தார். கடந்த சில நாட்களாக சிறுமிக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது.
சிறுமியிடம் தாயார் விசாரித்த போது, பள்ளிவாசலில் குர்ஆன் வகுப்பு எடுக்கும் மதகுரு (அஜரத்) தொண்டியைச் சேர்ந்த அன்சாரி 27, சிறுமிக்கு பலமுறை பாலியல் தொல்லை கொடுத்தது தெரிந்தது. இதுகுறித்து சாக்கோட்டை போலீசில் புகாரளிக்கப்பட்டது. இதையடுத்து அன்சாரியை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.