Politics
அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
கரூர்:தான்தோன்றிமலை மேற்கு ஒன்றியம், ஆண்டாங்கோவில் கிழக்கு பஞ்சாயத்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை

மேற்கு ஒன்றியம், ஆண்டாங்கோவில் கிழக்கு பஞ்சாயத்து, அ.தி.மு.க.,
நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம், ஆண்டாங்கோவில் புதுாரில் நடந்தது.
கரூர் மாவட்டத்தில் கிளை அமைப்புகளில், ஆலோசனை கூட்டங்கள்
நடத்துவது, கரூர் தொகுதி இடைத்தேர்தல் பணிகளை தொடங்குவது, சார்பு
அணிகளின் செயல்பாட்டை வேகப்படுத்துவது குறித்து, மாவட்ட அ.தி.மு.க.,
செயலாளர் கமலகண்ணன் பேசினார். கூட்டத்தில், மாநில அமைப்பு செயலாளர்
சின்னசாமி, மாவட்ட அவைத்தலைவர் திருவிகா, துணை செயலாளர்கள் மல்லிகா,
முத்து, முன்னாள் எம்.எல்.ஏ., காமராஜ், ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன்
உள்பட, பலர் பங்கேற்றனர்.