Crime, law and justice
உணவகங்களில் ஆய்வு தவறு செய்தால் நடவடிக்கை
திருப்பூர்:திருப்பூர் மாவட்ட உணவுப் பொருள் விற்பனை நிறுவனத்தினருக்கான விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம்,
மாவட்ட உணவுப் பொருள் விற்பனை நிறுவனத்தினருக்கான விழிப்புணர்வு
ஆலோசனை கூட்டம், ரமணாஸ் ஓட்டல் அரங்கில் நடந்தது. ஓட்டல்,
கேட்டரிங், பேக்கரி நிறுவனங்கள், தெருவோர உணவு விற்பனையாளர்கள்
மற்றும் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
திருப்பூர் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் செந்தில்குமார் பேசியதாவது:
கேட்டரிங் நிறுவனங்கள், கிளப்புகள், தள்ளுவண்டி மற்றும்
டீக்கடைகள் உள்ளிட்ட அனைத்து உணவுப் பொருள் தயாரிப்பு மற்றும் விற்பனை
நிறுவனங்களிலும், இம்மாதம் முதல் நவ., 30ம் தேதி வரை மூன்று மாதங்கள்
தொடர் ஆய்வு நடத்த, உணவு பாதுகாப்புத்துறை கமிஷனர்
உத்தரவிட்டுள்ளார்.
சுய பரிசோதனை செய்து, குறைபாடுகளை சரி செய்து கொள்ள வாய்ப்பு
வழங்கப்படுகிறது. அனைத்து நிறுவனங்களும் இந்திய உணவு பாதுகாப்பு
மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
மற்றும் உணவு சேமிப்பு பகுதிகள் சுகாதாரமாக பராமரிக்கப்பட
வேண்டும். உணவு கையாளுபவர்கள் சுத்தமான ஆடை, கையுறை, தலைக்கவசம்,
முகக்கவசம் அணிய வேண்டும். பயன்படுத்திய சமையல் எண்ணெயை மீண்டும்
பயன்படுத்தாமல், அங்கீகரிக்கப்பட்ட சேகரிப்பாளரிடம்
ஒப்படைக்க வேண்டும். ஆய்வின்போது விதிமீறல்கள் கண்டறியப்பட்டால்,
சட்ட ரீதியான அமலாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இவ்வாறு,
அவர் பேசினார்.