Health
இடுப்பு எலும்பு பாதுகாப்பு வெளிநாட்டினருக்கு சிகிச்சை
சென்னை: அமெரிக்கா, பிரிட்டனைச் சேர்ந்த நோயாளிகளுக்கு, வடபழநியில் உள்ள ‘சிம்ஸ்’ மருத்துவமனையில், ‘இடுப்பு எலும்பை பாதுகாக்கும்’ அறுவை சிகிச்சை செய்து, மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, எஸ்.ஆர்.எம்., குழும தலைவர் ரவி பச்சமுத்து கூறியதாவது:
அமெரிக்காவின் கலிபோர்னியாவைச் சேர்ந்த 44 வயது நபர், பிரிட்டனை சேர்ந்த 58 வயது ஆகியோர், இடுப்பு வலியால் பாதிக்கப்பட்டு வந்தனர். இரண்டு நோயாளிகளும், சிம்ஸ் மருத்துவமனைக்கு, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இவர்களுக்கு மேம்பட்ட அறுவை சிகிச்சையை, எலும்பியல் பிரிவு இணை இயக்குனர் விஜய் சி.போஸ் தலைமையிலான டாக்டர்கள் செய்துள்ளனர்.
இரண்டு நோயாளிகளுக்கும், ‘எலும்பை பாதுகாக்கும் இடுப்பு அறுவை சிகிச்சையை’ மருத்துவ குழுவினர் செய்தனர்.
வழக்கமான அறுவை சிகிச்சைகளில், அதிகளவு எலும்பு அகற்றப்படும். ஆனால் இங்குள்ள சிகிச்சை முறையில், குறைந்த அளவு எலும்பு மட்டும் அகற்றி, நிலையான மற்றும் சிறப்பான எலும்பு சீரமைப்பு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதன் வாயிலாக, நோயாளிகள் விரைந்து குணமடைந்தனர். இது, மருத்துவமனையின் அதிநவீன உட்கட்டமைப்பு வசதி, மருத்துவ குழுவினரின் திறமைக்கு சான்றாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.