Politics
டெல்லியில் இன்று தொடங்குகிறது பிரிக்ஸ் உச்சி மாநாடு! ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்
டெல்லியில் இன்று தொடங்கும் 2 நாள் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் 11 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். 7 ஆண்டுகளுக்குப் பிறகு சீன அதிபர், மோடியைச் சந்திக்கிறார்.

பிரிக்ஸ் நாடுகளின் இரண்டு நாள் உச்சி மாநாடு இன்று டெல்லியில் தொடங்குகிறது. இதில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, இந்தோனேசியா ஆகிய உறுப்பு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று இந்தியா வருகிறார். டெல்லியில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்கும் அவர், மாலையில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்திக்க உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்லைப் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை
இந்தச் சந்திப்பின்போது இந்தியா–சீனா இடையிலான எல்லைப் பிரச்சினை உள்ளிட்ட இருதரப்பு விவகாரங்கள் குறித்து முக்கியப் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.