Politics
“தி.மு.க.வில் சேர்ந்து விடுகிறேன் எனத் துரை வைகோ கூறினார்” - கே.என். நேரு பேட்டி!

திருச்சியில் முன்னாள் அமைச்சர் கே.என். நேரு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர் ஒருவர், “துரை வைகோ திமுகவைக் கடுமையாக விமர்சனம் பண்ணியிருக்கிறார்?” எனக் கேள்வி எழுப்பினார். அதற்குப் பதிலளித்த கே.என். நேரு கூறியதாவது, “அவரைப் பற்றி நான் பேச விரும்பவில்லை. ரொம்ப சின்ன பிள்ளை. ரொம்ப அதிகமாக பேசுறாரு.
அவர் என்ன சொன்னாருன்னு எங்களுக்குத் தெரியும். ‘எங்க அப்பா (வைகோ) கோபக்காரர். நான் கொஞ்ச நாள் பொறுங்கள். என்னாலெல்லாம் கட்சி நடத்த முடியாது. நான் உங்களோடு வந்துறேன்’ என்று சொன்னவர்தான்.அதெல்லாம் ஒரு பிரச்சனை. அவர் எப்ப என்ன பேசுறாருன்னே தெரியல. எங்களுடைய வளர்ச்சியை நின்னு போச்சுங்கிறாரு. வெற்றி அடைஞ்ச வேட்பாளர் அவங்களோட போயிருந்தால் வளர்ச்சி வந்திருக்குமா? என்று தெரியவில்லை.
கடுமையாகத்தான் பேசுறாரு. அவரு அப்படிப் பேசுகிறது நியாயம் இல்ல. நாங்களே திருப்பிப் பேசுனா, அது முகநூலில் வருது, யூடியுப்பில் வருது. எங்களைப் பற்றியெல்லாம், மு.க.ஸ்டாலினை பற்றியெல்லாம் வயதில் சின்னவர் பேசலாமா?. மு.க.ஸ்டாலினை பற்றியெல்லாம் பேசுறாரு. அப்ப அவர் பிறந்திருக்கவே மாட்டார். அதெல்லாம் பேசலாமா? என்ன பண்றது?” எனத் தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)