சாலையோர பள்ளத்தில் கவிந்த கார்

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே பாப்பனப்பட்டில் சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
மதுரையிலிருந்து நேற்று காலை சென்னை நோக்கி ஹோண்டாய் கார் சென்றது. காரில் டிரைவருடன் 5 பேர் வந்துள்ளனர். முண்டியம்பாக்கம் அடுத்த பாப்பனப்பட்டு சப்வே பணி நடைபெறும் இடம் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக சாலையோர பள்ளத்தில் காரின் வலது புற சக்கரம் இறங்கி தடுப்புச் சுவர் மீது சாய்ந்தது.
இதில் அதிர்ஷ்ட வசமாக காரில் பயணம் செய்த 5 பேருக்கும் காயம் ஏற்படவில்லை.
தகவல் அறிந்த விக்கிரவாண்டி டோல் பிளாசா ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து கிரேன் மூலம் காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்தனர். காரில் வந்தவர்கள் போலீசில், தங்களை பற்றிய விபரங்களைக் கூட தெரிவிக்காமல் சென்னை சென்றனர்.