Politics
மனைவி நல வேட்பு விழா
ராசிபுரம்:அமைப்பு விழா என, முப்பெரும் விழா, ராசிபுரம் ஆண்டகளூர்கேட் மனவளக்கலை அறக்கட்டளை வளாகத்தில்
விழா என, முப்பெரும் விழா, ராசிபுரம் ஆண்டகளூர்கேட் மனவளக்கலை
அறக்கட்டளை வளாகத்தில் நடந்தது. தலைவர் கந்தசாமி தலைமை வகித்தார்.
'மனைவியின் மாண்பு' என்ற தலைப்பில், உலக சமுதாய சேவா சங்கத்தின்
துணைத்தலைவரும், இயக்குனருமான தங்கவேலு பேசினார்.
அமைதி தினத்தை முன்னிட்டு நடந்த சிறப்பு சொற்பொழிவில், உலக சமுதாய சேவா
சங்கத்தின் மண்டல தலைவரும், இயக்குனருமான அருள்ஜோதி
கலந்துகொண்டு பேசினார்.
தொடர்ந்து, 'ஸ்கை' இளைஞர் அணியின் அமைப்பு
விழா நடந்தது. இதில், இளைஞர்களின் நலன், மனவளக்கலை மற்றும் உலக அமைதி
குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
நிறுவனங்களின் தலைவர் நடராஜன், எம்.பி., கேட்டரிங் முத்துசாமி,
சென்னை உலக சமுதாய சேவா சங்க பொருளாளர் ரவி உள்ளிட்டோர்
தம்பதியர்களாக மனைவி நல வேட்பில் பங்கேற்றனர்.