விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம்
சேத்தியாத்தோப்பு , செப்.10– வளையமாதேவியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது. சங்க
வளையமாதேவியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.
சங்க செயலாளர் சண்முகம் தலைமை தாங்கினார். தலைவர் வெங்கடேசன், பொருளாளர் தெய்வசிகாமணி முன்னிலை வகித்தனர்.
மாநில நிர்வாகக்குழு செயலாளர் சரவணன் சிறப்புரையாற்றினார். கூட்டத்தில், நெய்வேலி என்.எல்.சி., நிர்வாகம் கடந்த 2009ம் ஆண்டு நிலங்களை கையகப்படுத்தி ரூ. 1.95 லட்சம் மட்டும் வாழ்வாதாரத்தொகை வழங்கியது.
அதனை ரூ. 40 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். நிலம் கொடுத்த மக்களுக்கு மாற்று மனை, வீடு, வாழ்வாதாரம, வேலை வாய்ப்பு வழங்க வேண்டும்.
புதிதாக நிலம் கொடுத்தவர்களுக்கு வாழ்வாதாரம் வேலை வழங்கியது போல நிலம் கொடுத்து பாதிப்படைந்த குடும்பத்தில் ஒருவருக்கு கட்டாயம் வேலை வழங்க வேண்டும்.
சமூக பொறுப்புணர்வு நிதியை வெளிமாநிலங்களுக்கு எடுத்து செல்வதை விடுத்து இங்குள்ள மக்களுக்கு சாலை, குடிநீர், பள்ளி கட்டிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்வதற்கு செலவிட வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
மும்முடிசோழகன் முன்னாள் ஊராட்சி தலைவர் வெள்ளையன் நன்றி கூறினார்.