குடிநீர் கேட்டு ரோடு மறியல்
குஜிலியம்பாறை, செப்.6 பாளையம் பேரூராட்சி கோவில்பட்டியில் 300 குடும்பங்கள் வசிக்கின்றனர். வறட்சி காரணமாக
பாளையம் பேரூராட்சி கோவில்பட்டியில் 300 குடும்பங்கள் வசிக்கின்றனர். வறட்சி காரணமாக இப்பகுதி மக்களுக்கு போதிய குடிநீர் விநியோகம் இல்லை. பேரூராட்சி நிர்வாகம் சார்பில் புதிதாக போர்வெல் அமைத்தும் தண்ணீர் கிடைக்கவில்லை. குடிநீருக்கு மாற்று ஏற்பாடு செய்து தரக்கோரி அப்பகுதி மக்கள் பாளையம் – திருச்சி ரோட்டில் நேற்று மறியலில் ஈடுபட்டனர். பேரூராட்சி செயல் அலுவலர் பாஸ்கரன் வேறு போர்வெல் அமைத்து முறையான குடிநீர் வழங்கப்படும் என உறுதியளித்தார். பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.