Politics
சிவகாசியில் பாதாள சாக்கடை அமைக்க நிதி ஒதுக்காததால் ஏமாற்றம்: 15 ஆண்டாக தேர்தல் வாக்குறுதியாகவே உள்ள திட்டம்

சிவகாசி: தமிழக அரசு பட்ஜெட்டில் மதுரை, நாகர்கோவில் மாநகராட்சியில் பாதாள சாக்கடை
அமைக்க நிதி ஒதுக்கிய நிலையில் சிவகாசி மாநகராட்சிக்கு நிதி ஒதுக்காததால்
மக்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். 15 ஆண்டாக தேர்தல் வாக்குறுதியாகவே உள்ள
திட்டத்தை நிறைவேற்ற நிதி ஒதுக்கி பணிகளை துவக்க வேண்டும் என மக்கள்
எதிர்பார்க்கின்றனர்.
நகராட்சி இணைக்கப்பட்டு சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.
மாநகராட்சி ஆன பின்னர் பாதாள சாக்கடை அமைக்கப்படும் என அரசும்,
அதிகாரிகளும் தெரிவித்திருந்தனர். சிவகாசி, திருத்தங்கல் பகுதியில்
கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருப்பதோடு ஆக்கிரமிப்பினாலும் தெருக்கள்,
ரோடுகள் சுருங்கிவிட்டன. மழைக்காலங்களில் தண்ணீர் வெளியேறும் வகையில்
பல்வேறு ஓடைகள் இருந்தாலும் பெரும்பான்மையானவை துார்வாரப்படவில்லை. அனைத்து
தெருக்களிலும் வாறுகால் அமைக்கப்பட்டு இருந்தாலும் குடியிருப்புகள்,
தொழிற்சாலைகளின் கழிவுகளை தாங்கும் அளவிற்கு இல்லை. மழைக் காலங்களில்
சாக்கடை நீரோடு மழை நீரும் தெருவில், ரோட்டில் ஓடி மக்களை
சிரமப்படுத்துகிறது.
அமைப்பதற்கு 15 ஆண்டுகளுக்கு முன்பே திட்டமிடப்பட்டது. அடுத்தடுத்து யார்
ஆட்சிக்கு வந்தாலும் ஓட்டு வாங்குவதற்காக பாதாள சாக்கடை அமைக்கப்படும் என
கூறியே வெற்றி பெற்றனர். ஆனால் இதற்காக எந்த பணியும் துவங்காத நிலையில்
மீண்டும் பாதாள சாக்கடை அமைப்பது குறித்து வலியுறுத்தப்பட்டது. இதற்காக 4
ஆண்டுகளுக்கு முன்பு மாநகராட்சியில் அளவீடு செய்யும் பணி துவங்கியது.
சிவகாசி திருத்தங்கல் இரண்டும் சேர்த்து 179 கிலோமீட்டர் துாரம் பாதாள
சாக்கடை அமைக்க கணக்கெடுக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் சிவகாசி
மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட ஆணையூர், விஸ்வநத்தம், நாரணாபுரம்,
அனுப்பன்குளம், செங்கமல நாச்சியாபுரம் உள்ளிட்ட 9 ஊராட்சிகள் தற்போது
மாநகராட்சி நிர்வாகத்தில் இல்லை. இந்த ஊராட்சிகளும் மாநகராட்சியோடு
விரைவில் இணைக்கப்படும் போது பாதாள சாக்கடை திட்டத்தின் படி 360
கிலோமீட்டர் துாரம் அமைக்கப்பட வேண்டி இருக்கும்.
சமீபத்தில் பட்ஜெட்டில் முதல்வர் விஜய் , மதுரை மாநகராட்சியில் பழமையான
பாதாள சாக்கடை சீரமைக்கவும், நாகர்கோவில் மாநகராட்சி, குன்றத்துார்
நந்திவரம் கூடுவாஞ்சேரி நகராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டம் அமைக்கவும்
நிதி ஒதுக்கியுள்ளார். கடந்த காலங்களில் சிவகாசியில் பாதாள சாக்கடை
அமைக்கப்படும் எனக் கூறியும் நிதி ஒதுக்காததால் மக்கள் ஏமாற்றத்தில்
உள்ளனர். எனவே சிவகாசி மாநகராட்சியில் பாதாள சாக்கடை அமைக்க நிதி ஒதுக்க
வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.