Arts, culture, entertainment and media
வீட்டுக்கு வீடு தமிழ் விருந்து படைத்த சாலமன் பாப்பையா !

"அன்பு பெரியோர்களே!... அருமைத் தாய்மார்களே!... இனிய குழந்தைகளே'' என பட்டிமன்றங்களில் பல்லாண்டுகளாக ஒலித்து, உலகத் தமிழர்களை மகிழ்வித்த தமிழறிஞர் சாலமன் பாப்பையாவின் குரல் ஓய்வெடுத்துக் கொண்டது!
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே யுள்ள சாத்தங்குடி கிராமத்தில் 1936-ல் பிறந்தவர் சாலமன் பாப்பையா. மதுரை அமெரிக்கன் கல்லூரி யில் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றார். வெறும் வகுப்பறையோடு தனது தமிழ்ப் பணியைச் சுருக்கிக்கொள்ளாமல், 1961ஆம் ஆண்டு முதல் சுமார் 65 ஆண்டுகள் அவரது கம்பீரக்குரல் மேடைகளில் ஒலித்தது. 'வைகை வளவன்' என்ற புனைபெயரில் மேடைகளில் பேசிய வர், பிற்காலத்தில் 'சாலமன் பாப்பையா' எனப் பெற்றோர் வைத்த பெயருடன் பேசத்தொடங்கி னார். தோழர் ஜீவாவுக்கு பிடித்த பேச்சாளராக இருந்தவர். தமிழ் மொழிக்கு இவர் ஆற்றிய சேவையைப் பாராட்டி, 2000ஆம் ஆண்டு, தமிழக அரசு இவருக்கு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது. அதனை தொடர்ந்து 2021-ஆம் ஆண்டு இந்திய அரசு இவருக்கு "பத்மஸ்ரீ'’விருது வழங்கி கௌரவித்தது. மேலும் இவரது தமிழ்ப்புலமையால் உலகெங்கும் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.
கிராமத்து திருவிழாக்கள் தொடங்கி, தீபாவளி, பொங்கல் விழாக் காலங்களில் தொலைக்காட்சிவரை இவரது சிறப்பு பட்டிமன் றத்தை மொத்த குடும்பத்தினரும் கண்டு ரசிப்பது தமிழர்களின் விருப்பமான ஒன்றானது! தமிழறிஞர் சாலமன் பாப்பையா, கடந்த செப்டம்பர் 11 அன்று, அவரின் பிடித்தமான பாரதியாரின் நினைவு நாளில் தன் வாழ்க்கைப் பயணத்தை தனது 90வது வயதில் நிறுத்திக்கொண்டார்.
மதுரை ஞானஒளிபுரத்தில் வசித்துவந்த பாப்பையா, உடல்நலக்குறைவு காரணமாக அப்போ லோ மருத்துவமனையில் இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி காலமானார். அவரது மறைவுச்செய்தி அறிந்தவுடன் அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், இலக்கியவாதிகள் மற்றும் பொதுமக் கள் எனப் பலரும் நேரிலும் சமூகவலைத்தளங் களிலும் அஞ்சலி செலுத்தினர்.
பட்டிமன்றப் பேச்சாளர்கள் ராஜா, பாரதி பாஸ்கர் உள்ளிட்ட பலரும் அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தியபோது துக்கத்தை அடக்கமுடியாமல் குமுறியழுதனர்.
சாதி, மதச் சடங்குகளுக்கு அப்பாற்பட்டு அவரது உடலை தகனம் செய்ய வேண்டுமென்று சாலமன் பாப்பையா உயிலில் தெரிவித்ததை போலவே மதுரை தத்தனேரி மின் மயானத்தில், தமிழ்நாடு அரசின் காவல்துறையின் ஏன்ஹழ்க் ர்ச் ஐர்ய்ர்ன்ழ் எனப்படும் துப்பாக்கிக் குண்டுகள் முழக்கம் இல்லாத கௌரவ அரசு மரியாதை வழங்கப்பட்டது. அரசு சார்பில் அமைச்சர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். தி.மு.க.வின் மாமன்ற தலைவர் மா.ஜெயராமனும் சாலமன் பாப்பையாவின் மகனும் அவரது உடலை தூக்கி தகன மேடையில் வைக்க, உடல் தகனம் செய்யப்பட்டது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)