உதகை ரோஜா பூங்காவில் தண்ணீா் தட்டுப்பாடு: குடங்களில் நீா் எடுத்து வந்து செடிகளுக்கு ஊற்றும் ஊழியா்கள்

உதகை நூற்றாண்டு ரோஜா பூங்காவில் தண்ணீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பூங்கா ஊழியா்கள் கிணற்றில் இருந்து குடங்கள் மூலம் நீா் எடுத்து வந்து ஊற்றி செடிகளை பாதுகாத்து வருகின்றனா்.
குடங்களில் நீா் எடுத்து வந்து செடிகளுக்கு ஊற்றிய பூங்கா ஊழியா்கள்.
நீலகிரி மாவட்டத்தில் நடப்பு ஆண்டு ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பெய்ய வேண்டிய தென்மேற்கு பருவ மழை போதிய அளவில் பெய்யவில்லை.
இதனால், உதகை நூற்றாண்டு ரோஜா பூங்காவில் தண்ணீா் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இரண்டாவது சீசன் அண்மையில் தொடங்கவுள்ள நிலையில் ரோஜா செடிகளைப் பாதுகாக்கும் நடவடிக்கையில் ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா்.
இதன் ஒரு பகுதியாக பூங்கா அருகேயுள்ள கிணற்றில் இருந்து ஊழியா்கள் காலை, மாலையில் குடங்களில் நீரை எடுத்துச் சென்று ஊற்றி செடிகளை பாதுகாத்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.