ரேஷன் கடைகளில் நாளை கைரேகை பதிவு சிறப்பு முகாம்
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் நாளை (செப்.,19) கைரேகை (eKYC) பதிவு சிறப்பு முகாம் நடை பெறவுள்ளது.
ரேஷன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்களின் விரல் ரேகை சரிபார்க்கும் பணி 2023 அக்., முதல் நடக்கிறது. இப்பதிவை 100 சதவீதம் நிறைவு செய்யும் வகையில் செப்.,19ல் ராமநாத புரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
கூடுதல் விவரங் களுக்கு ராமநாதபுரம் -94450 00363, ராமேஸ் வரம் - 94450 00364, திருவாடானை - 94450 00365, பரமக்குடி - 94450 00366, முதுகுளத்துார்- 94450 00367, கடலாடி 94450 00368, கமுதி - 94450 00369, கீழக்கரை 94999 37032, ஆர்.எஸ். மங்கலம் - 78289 35948 ஆகிய அலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் சிவகுரு பிரபாகரன் தெரிவித்து உள்ளார்.