Religion
விநாயகர் சதுர்த்தி விழா கிராமிய கலை இசை நிகழ்ச்சி

புதுச்சேரி: விநாயகர் சதுர்த்தி விழா பேரவை சார்பில், நேற்று இந்து கலை இலக்கிய முன்னணியின் கிராமிய கலை இசை நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி விநாயகர் சதுர்த்தி விழா பேரவை சார்பில், 42ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 14ம் தேதி துவங்கியது. சாரம் அவ்வை திடலில் நடக்கும் விழாவில், 21 அடி உயர விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு தினமும் சிறப்பு பூஜைகள் நடந்து வருகிறது.
நேற்று மாலை 6:00 மணிக்கு மகா கணபதி சிறப்பு பூஜையுடன் நிகழ்ச்சி துவங்கியது. பா.ஜ., மாநில துணைத் தலைவர் ஜெயக்குமார் தலைமை தாங்கினார். ராஜா வரவேற்றார். பாண்டியமுனியன் வாழ்த்தி பேசினார். இந்து முன்னணி மாநில செயலாளர் பரமசிவம், விஸ்வ இந்து பரிஷத் கோட்ட பொறுப்பாளர் இளங்கோவன், பா.ஜ., பயிற்சியாளர் பிரிவு மாநில தலைவர் சக்திவேல், பா.ஜ., இளைஞரணி தலைவர் ஆடலரசன், ராஜகாந்த், சுந்தர்ராஜன், கார்த்திகேயன், ஜோதிசெந்தில் கண்ணன், முருகன் முன்னிலை வகித்தனர்.
டாக்டர் முத்துராமன், விவேகானந்தா கோச்சிங் சென்டர் நாகராஜன், ராமமூர்த்தி, முத்துகுமாரசாமி, செல்லப்பன், சதிஷ்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். மாதா அமிர்தானந்தமயி சேவா சமிதி சார்பில், பஜன் பக்தி பாடல் நிகழ்ச்சி நடந்தது. சுரேந்தர்குமாரின் இந்து கலை இலக்கிய முன்னணியின் கிராமிய கலை இசை நிகழ்ச்சி நடந்தது.