Politics
9ல் தி.மு.க., செயற்குழு நிர்வாகிகளுக்கு அழைப்பு
இடைப்பாடி; தி.மு.க.,வின், சேலம் மேற்கு மாவட்ட செயலர், எம்.பி., செல்வகணபதி அறிக்கை:
சங்ககிரி, பவானி சாலையில் உள்ள வாசுதேவ் மஹால் திருமண மண்டபத்தில், சேலம் மேற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம், வரும், 9 காலை, 10:00 மணிக்கு நடக்க உள்ளது. மாவட்ட அவைத்தலைவர் தங்கமுத்து தலைமை வகிப்பார்.
இதில் நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாக சீரமைப்பு குறித்து ஆலோசிக்கப்படும். மாநில, மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பி-னர்கள், இன்னாள், முன்னாள் எம்.எல்.ஏ., - எம்.பி.,க்கள், ஒன்றிய, நகர பேரூர் செயலர்கள், இளைஞர் அணி, மகளிர் அணி உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் பங்கேற்க வேண்டும்.