Sport
திருப்புத்துாரில் மாட்டு வண்டி பந்தயம்

திருப்புத்தூர்: திருப்புத்துார் அருகே தென்மாபட்டில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடந்தது.
தென்மாப்பட்டு, கண்டரமாணிக்கம் ரோட்டில் இரு பிரிவுகளாக நடந்த பந்தயத்தில் 47 ஜோடி வண்டிகள் பங்கேற்றன.
பெரிய மாடு பிரிவில் 16, சின்ன மாடு பிரிவில் 31 ஜோடி வண்டிகள் கலந்து கொண்டன. பெரியமாடு பிரிவு போட்டியில் முதல் நான்கு இடத்தை ரகு, பாலா, கணேசன், கலையரசன், வர்னிகா, முத்துக்குமார் பிடித்தனர். சிறிய வண்டி போட்டியில் 2 பிரிவாக நடந்தது.
இதில் முதல் நான்கு இடத்தை தேனி கே.கே., பட்டி தினேஷ் கார்த்திக், பிள்ளையார்பட்டி ரத்னா, நெடுமரம் இளங்கோ, ரணசிங்கபுரம் வினோத், இரண்டாம் போட்டியில் கானாடுகாத்தான் சோலை ஆண்டவர், கொளுஞ்சிப்பட்டி நாச்சியப்பன், திருச்சி செந்தில் பிரசாத், வெள்ளியங்குன்றம் அழகர்மலையான் வெற்றி பெற்றனர்.