Sport
சிங்கம்புணரியில் மாட்டுவண்டி பந்தயம்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி அருகே மணப்பட்டியில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு மாட்டுவண்டி பந்தயம் நடந்தது.
சிங்கம்புணரி யாதவ இளைஞர்களால் நடத்தப்பட்ட இப்பந்தயத்தை முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் துவக்கி வைத்தார். பாஸ்கரன், ஆனந்த கிருஷ்ணன் பங்கேற்றனர். இதில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 22 மாட்டு வண்டிகள் பங்கேற்றன.
பெரிய மாடு சின்ன மாடு என இரண்டு பிரிவுகளாக பந்தயம் நடத்தப்பட்டு முதல் நான்கு இடங்களை பிடித்த மாட்டு வண்டிகளின் உரிமையாளர்களுக்கும் சாரதிகளுக்கும் பரிசு வழங்கப்பட்டது.