Religion
ஸ்ரீ சீரடி ஆனந்த சாயி கோவிலில் கும்பாபிேஷகம் கோலாகலம்
உடுமலை: உடுமலை தில்லை நகர், சீரடி ஆனந்த சாயி கோவில், மகா கும்பாபிேஷகம் கோலாகலமாக நடந்தது.
உடுமலை தில்லை நகரிலுள்ள, சீரடி ஸ்ரீ ஆனந்த சாயி கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு, மகா கும்பாபிேஷகம் நேற்று நடந்தது.
நேற்று முன்தினம், காலை, 6:30 மணிக்கு, மங்கள இசையுடன் யாக சாலை பூஜைகள் துவங்கின. தொடர்ந்து கணபதி ஹோமம், மகா லட்சுமி ஹோமம், பாலிகை ஸ்தாபிதம் மற்றும் மாலை, 4:30 மணிக்கு, முதற்கால யாக சாலை பூஜைகள் நடந்தன.
நேற்று காலை, 5:00 மணிக்கு, கணபதி ஹோமம், வேத பாராயணம், இரண்டாம் கால யாக சாலை பூஜை, காலை, 7:30க்கு, யாத்ரா தானம், கலசம் புறப்பாடு நிகழ்ச்சிகள் நடந்தன.
தொடர்ந்து, 8:10 மணிக்கு, விமான கும்பாபிேஷகம், 8:45 மணிக்கு, மூல மூர்த்திகளுக்கு மகா கும்பாபிேஷகம் நடந்தது.
மேலும், பரிவார மூர்த்திகளான, ஸ்ரீ கன்னி மூல கணபதி, ஸ்ரீ ராமச்சந்திர மூர்த்தி, ஸ்ரீ ராம பக்த ஹனுமான் சுவாமிகளுக்கும் மகா கும்பாபிேஷகம் நடந்தது.
பின், ஸ்ரீ ஆனந்த சாயி சுவாமிக்கு, சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. பக்தர்களுக்கு மகா பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது. இதில், நுாற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
விழாவிற்கான ஏற்பாடுகளை, சீரடி ஸ்ரீ ஆனந்தசாயி கோவில் அறக்கட்டளை நிர்வாகிகள் செய்திருந்தனர்.



