Politics
போச்சம்பள்ளி சிப்காட்டில் கழிவு மேலாண்மை நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியது எப்படி பா.ம.க., - எம்.எல்.ஏ., சவுமியா காட்டம்
போச்சம்பள்ளி:போச்சம்பள்ளி சிப்காட் டில் அபாயகரமான கழிவு மேலாண்மை நிறுவனத்திற்கு எவ்வாறு அனுமதி
சிப்காட் டில் அபாயகரமான கழிவு மேலாண்மை நிறுவனத்திற்கு எவ்வாறு
அனுமதி வழங்கப்பட்டதென தெரியவில்லை,'' என, பசுமை தாயகம் தலைவரும்,
தர்மபுரி, பா.ம.க., - எம்.எல்.ஏ.,வுமான சவுமியா கூறினார்.
மாவட்டம், போச்சம்பள்ளி சிப்காட்டிற்கு சென்ற அவர், அங்குள்ள
ஒரு கழிவு மேலாண்மை நிறுவனத்தை ஆய்வு செய்த பின், நிருபர்களிடம்
சிப்காட் வளாகத்தில் மிகப்பெரிய நிறுவனங்களான ஓலா மற்றும் நைக் ஷூ
தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளிட்டவை செயல்படுகின்றன.
இப்பகுதியில் வசிக்கும் மக்களின் எதிர்ப்பை மீறி, அபாயகரமான கழிவு
மேலாண்மை நிறுவனத்திற்கு எவ்வாறு அனுமதி வழங்கப்பட்டது என
தெரியவில்லை. இங்கு, மருத்துவக் கழிவுகள் கொட்டி அழிக்கும்
கம்பெனிகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை மறுசுழற்சி செய்யும்
தொழிற்சாலைகளால் கடும் துர்நாற்றம் வீசுவதுடன், சுற்றுவட்டார
கிராமங்களில் நிலத்தடி நீர் பாதிக்கப்படுகிறது. குடிநீரின்
தன்மையே மாறியுள்ளதாக, கிராம மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் உள்ளிட்டோருக்கு நோய்
பாதிப்பும், அடிக்கடி உடல் நல பாதிப்பு, பெண்களுக்கு கருக்கலைந்து
விடுவதாக புகார்கள் தெரிவித்துள்ளனர். சிப்காட் வளாகத்தை குப்பை
கொட்டும் இடமாகப் பயன்படுத்த முடியாது. இதுதொடர்பாக தமிழக அரசின்
கவனத்திற்கு கொண்டு சென்று, அபாயகரமான கழிவு மேலாண்மை நிறுவனம் மூட
நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.