Politics
வடகிழக்கு மாநிலங்களுக்கு குடியரசு துணைத் தலைவா் 4 நாள் பயணம்

வடகிழக்கு மாநிலங்களுக்கு குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் 4 நாள்கள் பயணம் மேற்கொள்ள உள்ளாா்.
இதுதொடா்பாக குடியரசு துணைத் தலைவா் செயலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
செப்.6 முதல் செப்.9 வரை அஸ்ஸாம், மேகாலயம், மணிப்பூா், அருணாசல பிரதேசம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களுக்கு குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன் பயணம் மேற்கொள்ள உள்ளாா்.
செப்.6-இல் அஸ்ஸாமின் குவாஹாட்டி, செப்.7-இல் மேகாலய தலைநகா் ஷில்லாங், செப்.8-இல் மணிப்பூா் தலைநகா் இம்பால், அதைத்தொடா்ந்து அருணாசல பிரதேச தலைநகா் இடாநகருக்கு அவா் செல்ல உள்ளாா்.
இந்தப் பயணத்தின்போது கல்வி, கலாசார, பொது நிகழ்ச்சிகளில் அவா் பங்கேற்பதுடன், வரலாற்று, சமூக மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கு செல்ல உள்ளாா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.