Religion
அரசகுழி கோவில் கும்பாபிேஷகம்
விருத்தாசலம்: விருத்தாசலம் அடுத்த அரசகுழியில் விநாயகர், முருகன், முத்து மாரியம்மன் கோவில்களுக்கு நேற்று கும்பாபிேஷகம் நடந்தது.
அதனையொட்டி, நேற்று முன்தினம் காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, நவக்கிரக பூஜை, மாலை முதல்கால யாகசாலை பூஜை துவங்கியது.
நேற்று காலைஇரண்டாம் கால பூஜை, தீபாராதனை நடந்தது. காலை 8:30 மணிக்கு கடம் புறப்பாடு நிகழ்வுடன் கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிேஷகம் செய்து வைக்கப்பட்டது. பின்னர், மூலவருக்கு கும்பாபிேஷகம், பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.