Crime, law and justice
ரயிலில் 9 கி., குட்கா கடத்தல்
விருதுநகர்:விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனிற்கு ஹவுராவில் இருந்து திருநெல்வேலி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (12665) நேற்று காலை 5:20 மணிக்கு வந்தது. இதில் எஸ்.ஐ., பெருமாள், ஏட்டுக்கள் மாரித்துரை, கருப்பசாமி, கான்ஸ்டபிள் விக்னேஷ் ஆகியோர் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் முன்வகுப்பு பொதுப்பெட்டியில் வெள்ளை நிற சாக்கு பையில் 9 கிலோ குட்கா இருப்பதை கண்டறிந்து பறிமுதல் செய்தனர். ரயில்வே போலீஸ் எஸ்.ஐ., கார்த்திக் விசாரணை செய்து போதைப்பொருள் நுண்ணறிவு, குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.