Crime, law and justice
ரயிலில் 9.5கி கஞ்சா கடத்தல்
விருதுநகர், செப்.17 – விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனிற்கு கவுராவில் இருந்து திருநெல்வேலி செல்லும் எக்ஸ்பிரஸ்
விருதுநகர் ரயில்வே ஸ்டேஷனிற்கு கவுராவில் இருந்து திருநெல்வேலி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் (12665) நேற்று காலை 5:20 மணிக்கு வந்தது. இதில் எஸ்.ஐ., பெருமாள், ஏட்டுக்கள் மாரித்துரை, கருப்பசாமி, கான்ஸ்டபிள் விக்னேஷ் ஆகியோர் சோதனை செய்தனர்.
இதில் முன்வகுப்பு பொதுப்பெட்டியில் நீல நிற பேக், கருப்பு நிற பேக்கில் 9.5 கிலோ கஞ்சா இருப்பதை கண்டறிந்து பறிமுதல் செய்தனர். ரயில்வே போலீஸ் எஸ்.ஐ., கார்த்திக் விசாரணை செய்து போதைப்பொருள் நுண்ணறிவு, குற்றப்புலனாய்வுத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார்.