Religion
விநாயகர் சதுர்த்தி விழா ஹிந்து முன்னணி பூஜை
கடலுார்: கடலுாரில் ஹிந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தி சிறப்பு பூஜை நடந்தது.
கடலுார் மாவட்ட ஹிந்து முன்னணி தலைமையகமான மஞ்சக்குப்பத்தில் உள்ள துக்காராம் பஜனை மடத்தில் ஆண்டுதோறும் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்தாண்டு விநாயகர் சதுர்த்தியையொட்டி நேற்று விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்து, சிறப்பு பூஜையும், துக்காராம் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது.
நிகழ்ச்சியில் மாவட்ட ஹிந்து முன்னணி பொறுப்பாளர் வேல்முருகன், பா.ஜ., நகரத் தலைவர்கள் பிரேம்குமார், அருண்குமார், குறிஞ்சிப்பாடி ஹிந்து முன்னணி ஒன்றிய தலைவர் திவாகரன், நெய்வேலி நகர செயற்குழு உறுப்பினர் செல்வகணேஷ், தனஞ்செழியன், கடலுார் மாநகர இந்து முன்னணி செயலாளர் ரவிச்சந்திரன், பாலமுருகன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.