Politics
''தவெக அரசும் ரோகித் வெமுலா நிலையை உருவாக்குகிறது" -அயலக உயர்கல்வி திட்டத்தில் படித்து வரும் மாணவர் கண்ணீர்

மலேசியாவில் அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தில் படித்து வரும் மருத்துவ ஆராய்ச்சி மாணவர் பாரதிதாசன் என்பவர் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.
அதில் அமைச்சர் வன்னியரசை நோக்கி கேள்வி எழுப்பியும், கோரிக்கை வைத்தும் மாணவர் பாரதிதாசன் பேசியுள்ளதாவது, ''என்னுடைய நலம் விரும்பிகள் மருத்துவர்கள் மற்றும் நண்பர்களுக்கு நான் என் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நான் மிகவும் வேதனையில் ஒன்றை பதிவு செய்கிறேன். என்னுடைய நலம்விரும்பிகளுக்கு நான் அழுவது மனதை பாதிக்கும். சார் நான் ஏப்ரலில் இருந்து இந்த விஷயத்தை சொல்லி வருகிறேன். அண்ணல் அம்பேத்கர் உயர்கல்வி திட்டத்தில் கடந்த ஆண்டுக்கு நிதி வந்துவிட்டது. இந்த ஆண்டுக்கு நிதி வரவில்லை என பதிவு செய்திருந்தேன். அதை சட்டசபை வரைக்கும் பேசினார்கள். சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு இதற்கு மறுப்பு தெரிவித்தார். ஆனால் நிதி வரவில்லை என்பதற்கான எல்லா தகவலையும் தேதியுடன் குறிப்பிட்டு மெயில் அனுப்பினேன். மீதி தகவல்களையும் நான் பொதுவெளியில் போட்டேன்.
சில தகவல்கள் மிகவும் பாதுகாப்பானது. அதை பொதுவெளியில் கொடுக்கக் கூடாது என்ற அந்த சென்ஸ் எனக்கு இருக்கிறது. அதன் பிறகு சட்டசபையில் நீங்கள் அந்த விஷயத்தை பேசியதற்கு பிறகு எனக்கு அன்று இரவு ஒரு மெயில் அனுப்பினீர்கள். ஆனால் இன்னை வரைக்கும் ஃபண்ட் வரவில்லை. என்னை கல்லூரியில் இருந்து எலிமினேட் செய்யப் போகிறார்கள். அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் எய்ம்ஸ்-ல் என்னை பேப்பர் ப்ரெசென்ட் பண்ண கூப்பிட்டிருக்கிறார்கள். நான் அங்கேயும் போக முடியாத சூழலில் இருக்கிறேன். ஏனென்றால் என்னிடம் ஃபண்ட் இல்லை.
ஒரு ஆறு மாதமாக என்னுடைய ரிசர்ச்சில் எந்த முன்னேற்றமும் இல்லை. அந்த ரிசர்ச்காகத்தான் நான் ஃபண்ட் கேட்டேன். ஆனால் என் மேலே குறிப்பாக டார்கெட் செய்து உங்களிடம் இருக்கின்ற எல்லா பவரையும் என் மேல ஏவி ஒடுக்க நினைக்கிறீர்கள். நான் கடைசி மெயிலில் கூட குறிப்பிட்டிருந்தேன் என்னுடைய படிப்புக்கு என எதிக்ஸ் கோட் இருக்கும். என்னுடைய படிப்புக்கான எதிக்ஸ் கோட் என்னவென்ற தகவலையும் நான் உங்களுக்கு அனுப்பிய மெயிலில் குறிப்பிட்டேன். இப்பொழுது நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்றால் நீங்கள் முதலில் இருந்து ஆரம்பிக்கிறீர்கள். 'நீ இந்த ஆராய்ச்சிக்காக தான் இந்த பொருட்கள் எல்லாம் வாங்கினாயா என்ற கேள்வி வருகிறது' என்று சொல்லி ஒரு பதிவு போட்டு உள்ளீர்கள்.
என்னுடைய கோடை (CODE) அனுப்பிவிட்டேன்; என்னுடைய ப்ராஜெக்ட்டை அனுப்பிவிட்டேன்; என்னுடைய டைட்டிலை அனுப்பி விட்டேன். அதில் எல்லாமே இருக்கும். இப்போது இப்படி ஒரு கேள்வி எழுப்பி என்னுடைய கிரெடிபிலிட்டி, ஆராய்ச்சி என எல்லாத்தையும் ஸ்பாயில் செய்து விட்டீர்கள். என்னுடைய பேராசிரியர்கள் என் மீது ஒரு நம்பிக்கை வைத்திருந்தார்கள். அந்த நம்பிக்கையை நீங்கள் முடித்து விட்டீர்கள்.
நான் ஒரே ஒரு விஷயத்தை பதிவு செய்ய வேண்டும் என நினைக்கிறேன். காலம் காலமாக படிக்காமல் தான் இருந்தோம். எங்கள் கிராமத்தில் ஆராய்ச்சி படிப்புக்கு நான் தான் முதல் ஜெனரேஷன். எங்கள் குடும்பத்தில் மெடிக்கல் ரிசர்ச்சுக்கு நான்தான் முதல் ஜெனரேஷன். 'நீ ஏன் படிக்கிற படிக்காத' என சொல்ல வேண்டுமென்றால் சமூகநீதித்துறை அமைச்சர் வன்னியரசு சொல்லி விடுங்கள். 'உனக்கு எதற்கு ரிசர்ச், நீ அடிமையாக தான் இருந்தாய் அப்படியே இரு என்று சொல்ல வேண்டும்' என்றால் சொல்லிவிடுங்கள். தயவுசெய்து மெண்டல் டார்ச்சர் பண்ணாதீர்கள். முடியாது என்றால் முடியாது என்று சொல்லிவிடுங்கள். நான் மாற்று வழிகளை நான் பார்த்து இந்தியாவிலோ அல்லது வேறு எங்காவது என் கல்வியைத் தொடர முயற்சி செய்கிறேன். என்னை போட்டு மெண்டல் டார்ச்சர் பண்ணாதீர்கள்.
நான் நன்றாக இல்லை. வரலாற்றில் ரோகித் வெமுலாவுக்கு என்ன நடந்தது அன்னைக்கு. அங்கிருந்த மினிஸ்டரி என்னவாக செயல்பட்டர்களோ இன்னைக்கு தவெக மினிஸ்ட்ரி அவ்வாறு செயல்படுவதாக நான் குற்றச்சாட்டாக வைக்கிறேன். இது தான் உண்மை. ஜெய்பீம்'' என தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)