Politics
ராமநாதபுரத்தில் வ.உ.சி., பிறந்தநாள் விழா
ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரண்மனை அருகே சுதந்திர போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் படத்திற்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ராஜீவ் மலர்துாவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்துஅரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
வெள்ளாளர் முன்னேற்றக் கழக நகர் தலைவர் சுந்தரராஜன், மாவட்ட செயலாளர் மனோஜ்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட தலைவர் அஜித்குமார் ஏற்பாடுகளை செய்தார்.
சாயல்குடி: சாயல்குடியில் வெள்ளாளர் உறவின்முறை சங்கத்தின் சார்பாக வ.உ.சி., பிறந்தநாள் விழா நடந்தது. உறவின்முறை தலைவர் முனியசாமி தலைமை வகித்தார். செயலாளரும், முன்னாள் ராணுவப்படை வீரர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். சாயல்குடி இளைய ஜமீன்தார் சக்கரவர்த்தி, சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன் பங்கேற்றனர். பேச்சுப்போட்டி, நடனம் உள்ளிட்டவை நடந்தது.
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் வ.உசி., பேரவை சார்பில் ராமேஸ்வரம் கெந்தமாதன பர்வதத்தில் உள்ள சிவாலய மடத்தில் அவரது படத்திற்கு, ராமேஸ்வரம் நகர் வ.உ.சி., பேரவை தலைவர் வேடராஜன் மற்றும் நிர்வாகிகள் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
பரமக்குடி: சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனார் 155 வது பிறந்த தினம், ஆசிரியர் தின விழா வ.உ.சி., பள்ளியில் நடந்தது. அனைத்து வெள்ளாளர் மகாசபை நிறுவன தலைவர், பள்ளி சேர்மன் கார்த்திகேயன் தலைமை வகித்தார். காட்டுபரமக்குடியில் வ.உ.சி., சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பள்ளி வளாகத்தில் ஆசிரியர் தினம், வ.உ.சி., பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
பள்ளியின் நிர்வாகி இருளப்பன் தலைமை வகித்தார். முனியாண்டி முன்னிலை வகித்தார். முக்கியஸ்தர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். பள்ளி பொருளாளர் கோவிந்தராஜா நன்றி கூறினார்.