Arts, culture, entertainment and media
20 ஆண்டுகால திருமண வாழ்வு... சூர்யா- ஜோதிகா ஜோடி வெளியிட்ட Cute வீடியோ!

சூர்யா-ஜோதிகா ஜோடி 20 ஆண்டுகால திருமண வாழ்வை நிறைவு செய்தது. அவர்கள் தங்கள் திருமண உறுதிமொழிகளை புதுப்பிக்கும் வீடியோவை வெளியிட்டனர்.
“என்னில் இணைய உன்னை அடைய என்ன தவங்கள் செய்தேனோ” என்று 20 ஆண்டுகால திருமண நிறைவை கொண்டாடியுள்ள சூர்யா ஜோதிகாவின் வீடியோ வைரலாகி வருகிறது.
நட்சத்திர தம்பதியரான சூர்யா- ஜோதிகா ஜோடி திருமண வாழ்வில் 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில் அது தொடர்பான நிகழ்ச்சியின் வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
2006ஆம் ஆண்டில் திருமண வாழ்வில் இந்த காதல் ஜோடி இணைந்த நிலையில் தங்கள் வாழ்க்கையில் அடுத்த அத்தியாயம் தொடங்கியுள்ளதாக நடிகை ஜோதிகா நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். தங்கள் திருமண உறுதிமொழிகளை மீண்டும் புதுப்பித்துக்கொள்ளும் ஒரு நிகழ்ச்சியாக இது அமைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘காதல் மற்றும் போராட்டங்கள்’ நிறைந்த பயணத்தில் விட்டுக்கொடுத்தல்கள், புரிதல், தியாகங்கள் மற்றும் சுயநலமற்ற அன்பு ஆகியவற்றைக் கொண்டாடும் நிகழ்ச்சியாக இது அமைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பல்வேறு உறுதிமொழிகளையும் கூறியுள்ள ஜோதிகா, மகிழ்ச்சியாக இருப்பேன் எனவும் குறை கூற மாட்டேன் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
ஆரோக்கியமாகவும் சிறந்த தாயாகவும், நட்பாகவும் தொடர்வேன் எனவும் ஜோதிகா தெரிவித்துள்ளார். சண்டையிட்டு, பிறகு சமாதானமாகி ஒவ்வொரு முறையும் நெருக்கமாகும் ‘குறைகள் கொண்ட மனைவியாகவே’ எப்போதும் இருக்க உறுதியளிப்பதாகவும் ஜோதிகா நெகிழ்ச்சி பொங்க தெரிவித்துள்ளார்.
