Politics
வ.உ.சி., பிறந்தநாள் விழா
சாயல்குடி: சாயல்குடியில் வெள்ளாளர் உறவின்முறை சங்கத்தின் சார்பாக சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் 155வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. உறவின்முறை தலைவர் முனியசாமி தலைமை வகித்தார்.
செயலாளரும், முன்னாள் ராணுவப்படை வீரர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். சாயல்குடி இளைய ஜமீன்தார் சக்கரவர்த்தி, சாயல்குடி பேரூராட்சி தலைவர் மாரியப்பன் பங்கேற்றனர். பேச்சுப்போட்டி, நடனம் உள்ளிட்டவை நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.