Religion
காளை வாகனத்தில் உப்பூர் விநாயகர்
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழாவின் தொடர்ச்சியாக ஆறாம் நாள் ஊர்வலமாக ரிஷப ( காளை ) வாகனத்தில் விநாயகர் ஊர்வலம் நடந்தது.
முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. பின்னர் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா வந்த விநாயகருக்கு பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்.