Education
மத்திய அரசின் நிதி வீணடிப்பால் அரசு பள்ளி மாணவர்களின் கணினி கல்வி பாதிப்பு
ராமநாதபுரம்: ''மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கும் கணினி அறிவியல் ஆய்வக நிதி, கணினி பயிற்றுனர் பணிக்கான நிதி வீணடிக்கப்படுவதால் அரசு பள்ளிமாணவர்களின் கணினி கல்வி பாதிக்கப்படுகிறது,'' என, ராமநாதபுரத்தில் தமிழ்நாடு பி.எட்.,கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கம் மாநில பொதுச்செயலாளர் குமரேசன் குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது:மத்திய அரசின் சமக்ரசிக்ஷா ஐ.சி.டி., திட்டத்தின் நோக்கம் அரசுப்பள்ளிகளில்கணினி ஆய்வகங்களை உருவாக்குவதும், மாணவர்களுக்கு கணினிஅறிவியல் கல்வியை வழங்குவதும் ஆகும். இதற்காக வழங்கப்படும் நிதியும்,மனிதவளமும் மாணவர்களின் கல்வி பயன்பாட்டை சென்றடைய வேண்டும்.
ஆனால் 2024 லிருந்து மாணவர்களின் கல்விக்காகபயன்படுத்தப்பட வேண்டிய நிதி, நிர்வாகப் பணிகளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
தமிழகத்தில் செயல்படுத்தப்படும் ஐ.சி.டி., கணினி ஆய்வகங்களின்தற்போதைய நிலை குறித்தும் அரசு சிறப்பு ஆய்வு நடத்த வேண்டும். பல அரசுப்பள்ளிகளில் கணினி ஆய்வகங்கள் முறையாக பராமரிக்கப்படாமல்உள்ளன. மாணவர்களின் வழக்கமான கற்றலுக்கு பயன்படுத்தவில்லை. கடந்த ஆட்சியில் நடைமுறைக்கு வந்த திட்டங்களில் குறைபாடுகள் இருந்தால், அவற்றை தற்போதைய அரசு மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு திருத்த வேண்டும்.
இது பி.எட்.கணினி அறிவியல் ஆசிரியர்களின் வேலைவாய்ப்பு பிரச்னை மட்டுமல்ல. அரசுப்பள்ளிமாணவர்களின் எதிர்கால கணினி கல்வி தொடர்பான பிரச்னை ஆகும்.
எனவே மத்தி அயரசு வழங்கும் நிதி, அந்தத் திட்டத்தின் நோக்கத்திற்கேபயன்படுத்தப்பட்டு, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தரமான கணினி கல்விகிடைப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.