Religion
யானை வாகனத்தில் உப்பூர் விநாயகர்
ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அருகே உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயில் சதுர்த்தி விழாவில் ஐந்தாம் நாளில் யானை வாகனத்தில் விநாயகர் ஊர்வலம் நடைபெற்றது. முன்னதாக மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனைகள் செய்யப்பட்டு ஊர்வலம் நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாகச் சென்ற விநாயகருக்கு பக்தர்கள் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தனர்.
பத்து நாட்கள் நடைபெறும் சதுர்த்தி விழாவில் எட்டாம் நாளான செப்.,12 ல் திருக்கல்யாணம் நடக்கிறது. தொடர்ந்து மறுநாள் தேரோட்டம் நடைபெற்று செப்.,14 ல் நடைபெறும் சதுர்த்தி தீர்த்த வாரியுடன் விழா நிறைவடைகிறது.