Arts, culture, entertainment and media
உண்ணாவிரதம்
வேடசந்துார்:குடகனாறு நரசிங்கபுரம் ராஜவாய்க்கால் பகுதியில் கட்டப்பட்டுள்ள தடுப்புச் சுவரை அகற்றக் கோரி வேடசந்துார் பகுதியில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.
குடகனாறு பாதுகாப்பு சங்கம் சார்பில் நடந்த போராட்டத்திற்கு தலைவர் ராமசாமி தலைமை வகித்தார். செயற்குழு உறுப்பினர்கள் செல்வராஜ், சுப்பிரமணி, குப்புசாமி, செல்வம், தமிழ்வாணன் முன்னிலை வகித்தனர். முன்னாள் எம்.எல்.ஏ., பரமசிவம், பா.ம.க., மாவட்டத் தலைவர் கணேசன், அனைத்து வர்த்தக சங்கத் தலைவர் சுகுமார் பங்கேற்று பேசினர். முக்கிய பிரமுகர்கள் ராஜ்மோகன், ஆறுமுகம், பாபு சேட், ஆண்டவர், ரமேஷ், குமரேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.